- XUV 3XO ஒரு மணி நேரத்திற்குள் முன்பதிவு மைல்கல்லை எட்டியது
- மே 26 முதல் டெலிவரி தொடங்கும்
மஹிந்திரா நிறுவனம் நேற்று அதாவது மே 15ஆம் தேதி முதல் XUV 3XO-க்கான முன்பதிவுகளை ரூ. 11,000க்கு தொடங்கியுள்ளது. இப்போது இந்த மாடல் முதல் 10 நிமிடங்களில் 27,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் 50,000 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது மேலும் இந்த கார் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மிகப்பெரிய அப்டேட் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் 9,000 யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. இருப்பினும், 10,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் அதன் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதாவது மே 15, 2024 வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த சப்-ஃபோர்-மீட்டர் எஸ்யுவி கடந்த மாதம் 29 ஆம் தேதி ரூ. 7.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, மே 26 ஆம் தேதி முதல் அதன் டெலிவரி தொடங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் புதிய மஹிந்திரா XUV 3XO ஐ ஒன்பது வேரியன்ட்ஸ், எட்டு வண்ணங்கள் மற்றும் மூன்று இன்ஜின் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். மேலும், இந்த காரைப் பற்றிய எங்கள் கருத்தை நாங்கள் எங்கள் வெப்சைட்டில் குடுதுள்ளோம். XUV 3XO இல் உள்ள சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், லெவல் 2 ஏடாஸ், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 65W டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அடங்கும்.
இது குறித்து மஹிந்திராவின் வாகனப் பிரிவுத் தலைவரான விஜய் நக்ரா கூறுகையில், 'XUV 3XO க்கான முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அதன் புதுமை மற்றும் டெலிவரி மதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த கார் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது, இது காரின் எதிர்கால இயக்கத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்வதற்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு XUV 3XO ஐ வழங்குவதற்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்