- T03 ஹேட்ச்பேக் மற்றும் C10 எலக்ட்ரிக் எஸ்யுவி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- இது டாடா டியாகோ இவி உடன் போட்டியிடும்
இந்தியாவின் வருகை
லீப்மோட்டார் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய சீன இவி தயாரிப்பாளர் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அதன் சர்வதேச சந்தையில் நுழைவதாக உள்ளது.
மாடல் ரேஞ்ச்
இந்த ஆட்டோமேக்கர் இந்தியாவில் T03 ஹேட்ச்பேக் மற்றும் C10 எலக்ட்ரிக் எஸ்யுவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. T03 ஆனது டாடா டியாகோ இவி உடன் போட்டியிடும், இது கிட்டத்தட்ட டியாகோ இவி போன்ற டைமென்ஷன் மற்றும் 265 கிமீ தூரம் செல்லும். மறுபுறம், C10, ஃபைவ் சீட்டர் கொண்ட எஸ்யுவி ஆகும், இது டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற நீளம் மற்றும் அகலத்தில் உள்ளது. இ-என்சிஏபி சோதனையின் சமீபத்திய கிராஷ் டெஸ்டில் இது ஃபைவ் ஸ்டார் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மேலும் இது 420 கிமீ தூரம் வரை செல்லக்கூடியா டிரைவிங் ரேஞ்சை தரும் என்று நிறுவனம் கூறுகிறது.
ஷோரூம் மற்றும் சர்வீஸ் பிளான்
நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில் அசெம்பிள் செய்ய உள்ளது, இது இந்த கார்களின் விலையை குறைக்க உதவும், இது சமீபத்தில் சீன கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி கட்டணங்களால் அதிகமாக உள்ளது. லீப்மோட்டார் மல்டி-பிராண்ட் சில்லறை விற்பனை வழியை எடுத்து, ஷோரூம் மற்றும் சர்வீஸ் இடத்தை ஜீப் மாடல்களுடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
மல்டி-பிராண்ட் ஃபார்முலா
பல பிராண்டுகள் இந்திய கார் சந்தையில் மல்டி-பிராண்ட் ஃபார்முலாவை ஏற்று வெற்றி கண்டுள்ளன. இதில் ஏற்கனவே கியா-ஹூண்டாய், ரெனோ-நிசான், மாருதி-டொயோட்டா, வோக்ஸ்வேகன்-ஸ்கோடா ஆகியவை அடங்கும். லீப்மோட்டார் இந்தியாவில் ஸ்டெல்லண்டிஸ் உடன் இணைந்து அதன் இவி ஐ அறிமுகப்படுத்தும், இதன் காரணமாக அதிக சார்ஜிங் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் கிடைக்கும். இருப்பினும், இந்த கூட்டணியின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்