- ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- 10 நாட்களில் 10,000 யூனிட்ஸின் புக்கிங் ஐ கடந்துவிட்டது
மாருதி சுஸுகி தனது புதிய ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை மே 9 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேட்ட ஹேட்ச்பேக் ஐந்து வேரியன்ட்ஸுடன் ரூ. 6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கியதில் இருந்து, 10 நாட்களில் 10,000 க்கும் மேற்பட்டோர் இதை புக் செய்துள்ளனர், இப்போது வாடிக்கையாளர்கள் அதன் டெலிவரியைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+ ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இருப்பினும், டெலிவரி செய்யப்பட்ட மாடல் என்ட்ரி லெவலான LXi வேரியன்ட் ஆகும், இது ரூ. 6.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் உள்ளது. இதன் டாப்-ஸ்பெக் வெர்ஷன் ரூ. 9.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.
புதிய ஸ்விஃப்ட்டில் புதிய கிரில், டிஆர்எல்களுடன் கூடிய மெலிதான எல்இடி ஹெட்லேம்ப்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய அலோய் வீல்ஸ் மற்றும் ரியர் டோரில் ரிடிசைன் செய்யப்பட்ட டோர் ஹேண்டல்ஸை ஆகியவற்றைப் பெறுகிறது.
இது தவிர, ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட ஸ்விஃப்ட்டின் கேபினில் புதிய டாஷ்போர்டு லேஅவுட் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்ஸ், வயர்லெஸ் சார்ஜர், டைப்-சி சார்ஜிங் போர்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வென்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
இது இப்போது Z-சீரிஸின் த்ரீ சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது. இந்த இன்ஜின் 80bhp பவரையும், 112Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இது அதிக மைலேஜ் தரும். இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்