- பிஒய்டி சீல் அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்
- டாடா கர்வ் 500 கிமீ டிரைவிங் ரேஞ்சை தரும்
தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ள நிலையில், பல வாகன உற்பத்தியாளர்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். வரும் மாதங்களில் மஹிந்திரா, பிஒய்டி, கியா , டாடா மற்றும் மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்கள் புதிய மின்சார கார்களை அறிமுகப்படுத்தப் போகின்றன என்பதை இதிலிருந்து மதிப்பிடலாம்.
டாடாவின் அதிகம் விற்பனையாகும் நெக்ஸான் மற்றும் எம்ஜியின் காமெட் உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்க பல கார் தயாரிப்பாளர்கள் லட்ச ரூபாய் வரை தள்ளுபடியை வழங்குகின்றனர். நீங்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்கள் முதல் எலக்ட்ரிக் காரை வாங்க உதவும், அதுக்கு நீங்கள் இதை முழுமையாக படிக்க வேண்டும்.
பிஒய்டி சீல்
பிஒய்டி சீல் இந்தியாவில் முதல் முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த செடான் இந்தியாவில் பிராண்டின் மூன்றாவது தயாரிப்பாக இருக்கும். 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த சீல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும். இதில் 61.4kWh மற்றும் 82.5kWh பேக் உட்பட இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் சீல் வழங்கப்படலாம். இந்த பேட்டரி பேக் மூலம் முறையே 550 கிமீ மற்றும் 700 கிமீ தூரம் செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.
மஹிந்திரா XUV300 இவி
மஹிந்திரா தனது XUV300 ஃபேஸ்லிஃப்டை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய XUV300 இவி அதன் ஐசிஇ வெர்ஷனுடன் காட்சிப்படுத்தப்படும் என்ற செய்தியும் உள்ளது. XUV300 இவி ஆனது XUV400 இவியை விட சிறியதாக இருக்கும் மற்றும் நெக்ஸான் இவிக்கு கடுமையான போட்டியை கொடுக்கும். XUV300 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் XUV300 இவி’யின் வெளியீட்டு காலவரிசை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதை நீங்கள் எங்கள் வெப்சைட்டில் காணலாம்.
டாடா கர்வ் இவி
டாடாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் இவி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராண்டின் படி, கர்வ் எலக்ட்ரிக் ஐசிஇ பதிப்பிற்கு முன் அறிமுகப்படுத்தப்படலாம், இது ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். இது வேரியன்ட்டை பொறுத்து 400-500 கிமீ வரையிலான பல ரேஞ்ச் விருப்பங்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கியா ev9
கியா EV9 ஆனது பிராண்டின் இ-ஜிஎம்பி ப்ளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டது, இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகமானது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 541 கிமீ வரை டிரைவிங் ரேஞ்ச்ஜை வழங்குகிறது. இது ஒரு டாப்-ஸ்பெக் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மூன்று வரிசை எலக்ட்ரிக் எஸ்யுவி 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி eVX
மாருதி eVX இன் அப்டேட்ட வெர்ஷன் 2023 ஜப்பானிய மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது, ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிடப்பட்ட வெர்ஷனோடு ஒப்பிடும்போது சிறிய வடிவமைப்பு புதுப்பிப்புகள் இடம்பெற்றுள்ளன, மேலும் காரின் இன்டீரியர் வெளிப்படுத்தப்பட்டது. இந்த மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யுவி சோதனையின் போது பல முறை கண்டறியப்பட்டது. இது ஏடாஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராண்டின் படி, இது 60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்