- ஒரே நேரத்தில் அனைத்து வேரியண்ட்ஸின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன
- இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கின்றன
சிட்ரோன் இந்தியா நிறுவனம், நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதன் என்ட்ரி லெவல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் eC3 இன் விலையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் ரூ. 11.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)விலையில் விற்கப்படுகின்றன. இப்போது, ஃப்ரென்ச் வாகன உற்பத்தியாளர் eC3 இன் அனைத்து வேரியண்ட்ஸின் விலையில் ரூ. 11,000 வரை உயர்த்தப்பட்டன.
சிட்ரோன் eC3 இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது லைவ் மற்றும் ஃபீல். இதன் பிறகு வைப் பேக் மற்றும் டூயல் டோன் ஆப்ஷனில் கிடைக்கிறது. லேட்டஸ்ட் புதுபிபுகளை பார்க்கும்போது, சிட்ரோன் eC3 இன் எக்ஸ்-ஷோரூம் விலை 11.61 லட்சம். இது தவிர, சிட்ரோன் eC3 இன் வேறு சில வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
லைவ் | ரூ. 11.61 லட்சம் |
ஃபீல் | ரூ. 12.49 லட்சம் |
ஃபீல் வைப் பேக் | ரூ. 12.64 லட்சம் |
ஃபீல் வைப் பேக் டூயல் டோன் | ரூ. 12.79 லட்சம் |
eC3 ஆனது 56bhp மற்றும் 143Nm டோர்க்கை உருவாக்கும் திறன் கொண்ட சிங்கள் மோட்டார் அமைப்புடன் கிடைக்கிறது. இந்த மோட்டார் 29.2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது ஒரு முழு சார்ஜில் 320 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்