- 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்படும்
- இந்த விலை உயர்வு எல்லா கார்களிலும் விதிக்கப்படும்
சிட்ரோன் இந்தியா 1 ஜனவரி 2023 முதல் இந்த பிராண்ட் அதன் ரேஞ்சில் உள்ள எல்லா கார்களின் விலை உயர்வை விதிக்கும் என அறிவித்துள்ளது. அனைத்து மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மற்றும் மாடலைப் பொறுத்து 2.5-3 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். தற்போது, நிறுவனம் சிட்ரோன் C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ்ஸை நாட்டில் விற்க்கப்பட்டு வருகிறது.
அனைத்து புதிய விலைகளும் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும், மேலும் மாடல்களை தற்போதுள்ள விலையில் டிசம்பர் 31, 2023 வரை வாங்கலாம். சிட்ரோன் கார்களும் டிசம்பர் 2023ல் 3.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகின்றன. அதன் விரிவான பிரிவு இதோ.
மாடல்ஸ் | தள்ளுபடிகள் |
சிட்ரோன் c3 | ரூ. 99,000* வரை தள்ளுபடி |
சிட்ரோன் c3 ஏர்கிராஸ் | ரூ. 1.5 லட்சம்* வரை தள்ளுபடி |
சிட்ரோன் c5 ஏர்கிராஸ் | ரூ. 3.5 லட்சம்* வரை தள்ளுபடி |
C3 என்பது பிராண்டின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மற்றும் இரண்டு இன்ஜின் விருபங்கள் மூலம் இயக்கப்படுகிறது. இது 80bhp மற்றும் 109bhp டோர்க்கை வழங்கும் என்ஏ மற்றும் டர்போ பெட்ரோல் வடிவங்கள் அடங்கும். C3 ஏர்கிராஸ் பிந்தைய இன்ஜினைப் பயன்படுத்துகிறது மற்றும் ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட அமைப்பைக் கொண்டிருக்கும்.
C5 ஏர்கிராஸ் பிராண்டின் முதன்மை எஸ்யுவி மற்றும் 2.0 லிட்டர் டீசல் மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இது 174bhp மற்றும் 400Nm டோர்க்கையும் வெளிப்படுத்துகிறது மற்றும் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்