- இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன
- 320 கி.மீ மைலேஜ் ரேஞ்சை தருகிறது
சிட்ரோன் C3 ஹேட்ச்பேக்கின் எலக்ட்ரிக் வெர்ஷன் eC3 ஐ பிப்ரவரி 2023 இல் அறிமுகப்படுத்தியது, இது லைவ் மற்றும் ஃபீல் என்ற இரண்டு வேரியாண்ட்ஸில் வழங்கப்படுகிறது. கார் தயாரிப்பு நிறுவனம் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் விலையில் ரூ.25,000 வரை உயர்த்தியுள்ளது.
சிட்ரோன் eC3 விலைகள்
எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் வேரியண்ட் வாரியாக திருத்தப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
லைவ் | ரூ. 11,50,000 |
ஃபீல் | ரூ. 12,38,000 |
ஃபீல் வைப் பேக் | ரூ. 12,53,000 |
ஃபீல் வைப் பேக் டூயல்-டோன் | ரூ. 12,68,000 |
லைவ் வேரியன்ட் தவிர, மற்ற அனைத்து வேரியண்ட்ஸிலும் ரூ.25,000 வரை அதிகரித்துள்ளது.
eC3 இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்
வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் அடிப்படையில், eC3 அதன் ஐசிஇ மாடல்ஸைப் போலவே உள்ளது, ஆனால் ஃப்ரண்ட் ஃபெண்டரில் பிளாக்-ஆஃப் முன் கிரில் மற்றும் சார்ஜிங் ஃபிளாப்பை பெறுகிறது. இன்டீரியரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய 10.2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-டோன் டாஷ்போர்டு மற்றும் கான்ட்ராஸ்ட் கலர் ஸ்கீமுடன் கூடிய ஃபேப்ரிக் சீட்ஸுடன் கிடைக்கின்றன.
சிட்ரோன் eC3 பேட்டரி மற்றும் ரேஞ்ச்
சிட்ரோன் eC3 ஆனது 2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது 56bhp மற்றும் 143Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது சிங்கிள் ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் ஈகோ என இரண்டு டிரைவிங் மோட்ஸில் வருகிறது மற்றும் ஒரு சார்ஜில் இது 320 கி.மீ ரேஞ்ச் வரை பயணிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 15A டிசி ஃபாஸ்ட் சார்ஜர் விருப்பத்தைக் கொண்டுள்ளது
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்