- இது ஃபார்ச்சூனரின் அதிக அம்சங்களைக் கொண்ட மாடலாகும்
- விலைகள் டீலர்களைப் பொறுத்தது
டொயோட்டா சமீபத்தில் ஃபார்ச்சூனரின் லீடர் எடிஷன்னை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் விலை டீலர்ஷிப்பில் உள்ள குறிப்பிட்ட ஆக்சஸரீஸ் சார்ந்தது. இது ஒரு காஸ்மெட்டிக் அப்டேட்ட வேரியன்ட் ஆகும், இது ஸ்டாண்டர்ட் வெர்ஷனிலிருந்து வேறுபட்டது மற்றும் இந்த கட்டுரையில் அதன் சிறந்த அம்சங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
டூயல்-டோன் எக்ஸ்டீரியர்
லீடர் எடிஷனில் பிளாக் ரூஃப் இருக்கும், இது ஃபார்ச்சூனருக்கு டூயல்-டோன் தோற்றத்தைக் கொடுக்கும். கூடுதலாக, இது மூன்று எக்ஸ்டீரியர் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது, இதில் சூப்பர் ஒயிட், பிளாட்டினம் பேர்ல் ஒயிட் மற்றும் சில்வர் மெட்டாலிக் ஆகியவை அடங்கும்.
பம்பர் ஸ்பாய்லர்/எக்ஸ்டெண்டர்
காரின் தோற்றத்தை மேலும் மேம்படுத்த, இந்த ஸ்பெஷல் எடிஷனில் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர் ஸ்பாய்லர் அல்லது எக்ஸ்டெண்டர் உள்ளது. இவை டிடிஐபிஎல் ஆல் தயாரிக்கப்பட்ட ஆக்சஸரீஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களால் மட்டுமே இன்ஸ்டால் செய்யப்படும்.
பிளாக் அலோய் வீல்ஸ்
ஃபார்ச்சூனர் லீடர் எடிஷனில் வழக்கமான சில்வர் கலர் அலோய்களுக்குப் பதிலாக பிளாக் அலாய் வீல்கள் இருக்கும்.
வயர்லெஸ் சார்ஜர்
பல ஆப்ஷனல் ஆக்சஸரீஸ் தவிர, இந்த ஸ்பெஷல் எடிஷனில் வயர்லெஸ் சார்ஜர் ஸ்டாண்டர்டாக இருக்கும்.
டீபிஎம்எஸ் (TPMS)
இதில் டீபிஎம்எஸ் (டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்) உள்ளது, இது இந்த எஸ்யுவிக்கு மிக முக்கியமான ஆக்சஸரீஸாகும்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள்
ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 201bhp மற்றும் 420Nm (எம்டீ) அல்லது 500Nm (ஏடீ) டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் 4x2 இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்