- இந்த மாடல் 4 வேரியன்ட்ஸ் மற்றும் 7 எக்ஸ்டீரியர் வண்ணங்களில் வழங்கப்படுகிறது
- இந்தியாவில் ரூ. 15.49 லட்சத்தில் இருந்து விலை தொடங்குகிறது
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹேரியர் எஸ்யுவியின் லேடஸ்ட் வெர்ஷன்னை அக்டோபர்-2023 இல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. டிசைன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் அதன் முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது, இது எஸ்யுவி வாங்குபவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் ஓரளவுக்கு வெயிட்டிங் பீரியட்டை உள்ளது. ஃபிளாக்ஷிப் எஸ்யுவியின் தற்போதைய வெயிட்டிங் பீரியட் பற்றிய விவரங்கள் இதில் தெரிந்து கொள்வோம்.
தற்போதைய நிலவரப்படி, புதுப்பிக்கப்பட்ட ஹேரியரில் முன்பதிவு செய்த நாளிலிருந்து 3 முதல் 6 வாரங்கள் வரை வெயிட்டிங் உள்ளது. இது ரிஜென், டீலர்ஷிப், வேரியன்ட், நிறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இந்த வெயிட்டிங் பீரியட் மாறுபடலாம் என்பது இங்கே தெரிந்து கொள்ள வேண்டியது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உங்கள் விருப்பப்படி குறிப்பிட்ட வெயிட்டிங் பீரியட்டை அறிய உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
2023 டாடா ஹேரியரில் 2.0-லிட்டர் BS6 ஃபேஸ் 2 டீசல் இன்ஜின் 170bhp மற்றும் 350Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் டிரான்ஸ்மிஷனில் இது 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட் மூலம் லிட்டருக்கு 16.8 கிமீ மற்றும் லிட்டருக்கு 14.6 கிமீ என கூறப்படும் ஃப்யூல்- எஃபிஷியன்சியை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்