- இது நெக்ஸானின் இன்ஜினைப் பெறலாம்
- அல்ட்ரோஸ் ரேசரில் 360 டிகிரி கேமரா, வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் பலவற்றைப் பெறும்
தற்போது ஹூண்டாய் i20 என் லைன் ஆதிக்கம் செலுத்தும் பர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் புதிய காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. அல் நியூ அல்ட்ரோஸ் ரேசர் ஜூன் 2024 முதல் பாதியில் நாட்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ரோஸ் ரேசர் முதன்முதலில் இந்தியாவின் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 2024 இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போவில் அதன் அதிகாரப்பூர்வ ஷோகேஸுடன், இந்த மாடல் பல சந்தர்ப்பங்களில் ஸ்பை செய்யப்பட்டது. டிசைனைப் பொறுத்தவரை, அல்ட்ரோஸ் ரேசரில் ஸ்போர்ட்டி லூக் இருக்கும், இது இந்த ஹேட்ச்பேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும். இதில் பிளாக்ட்-அவுட் ரூஃப், ஓஆர்விஎம்ஸ் மற்றும் பில்லர் ஆகியவை அடங்கும். கூடுதலாக, தோற்றத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அல்ட்ரோஸ் ரேசரின் ரூஃப் மற்றும் பானட்டில் டூயல் ஒயிட் ஸ்ட்ரிப்ஸ் இருக்கும்.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், டாடா அல்ட்ரோஸ் ரேசரில் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸ், ஆறு ஏர்பேக்குகள், ஏர் ப்யூரிஃபையர், வாய்ஸ்-எனெபல்ட் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், அலுமினிய பெடல்கள், சிவப்பு தையல் மற்றும் அக்ஸ்ன்ட்ஸ் மற்றும் 360-டிகிரி சரவுண்ட் கேமராக்கள் வழங்கப்படும்.
டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஆனது நெக்ஸானின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறும். இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும், இது 120bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்கும். அல்ட்ரோஸ் ரேசர் நேரடியாக ஹூண்டாய் i20 என் லைனுடன் போட்டியிடும். இருப்பினும், இது ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்ஸாவுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்