- eVX அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- மாருதியின் முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும்
மாருதி சுஸுகி தனது எலக்ட்ரிக் மாடல் eVX-ஐ தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது, இது 2025 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா இவி உடன் போட்டியிடும் இந்த மாடலின் ஆன்லைனில் பகிரப்பட்ட புதிய ஸ்பை படங்கள், அதன் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன, இந்த கட்டுரையில் நாம் அதை விவாதிக்கப் போகிறோம்.
ஸ்பை படங்களில் காணப்படுவது போல், மாருதி eVX அதன் தற்போதைய மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இன்டீரியரைப் பெறும். இது ஒரு புதிய டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், டிரைவ் மோடுகளுக்கான ரோட்டரி டயல், புதிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டோர் ஹேண்டல்ஸில் குரோம் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம்கள் ஆகியவற்றைப் பெறும்.
மாருதியின் இந்த முதல் இவி’யில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், புதிய அலோய் வீல்கள், சி பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவற்றைப் பெறும்.
புதிய eVX இன் இன்ஜின் மற்றும் பேட்டரியின் விவரங்களை மாருதி சுஸுகி வெளியிடவில்லை. இந்த மாடலில் 60kWh பேட்டரி பேக் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், இது எலக்ட்ரிக் மோட்டாருடன், ஒரு முழு சார்ஜில் 550 கிமீ வரை டிரைவிங் ரேஞ்சை தரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்