- மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை ரூ. 8.34 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் விருபங்களில் கிடைக்கிறது
மாருதி சுஸுகி நிறுவனம், இந்த புத்தாண்டில் தங்கள் வாகனங்களின் விலை அதிகரிக்கலாம் என்று கடந்த மாதம் அறிவித்திருந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி பிரெஸ்ஸாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வேரியன்ட் வாரியாக உயர்த்தப்பட்ட விலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
மாருதி பிரெஸ்ஸாவின் விலை ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு அதன் வகைகளான ZXi, ZXi டூயல் டோன், ZXi சிஎன்ஜி, ZXi சிஎன்ஜி டூயல் டோன், ZXi+ மற்றும் ZXi+ டூயல் டோன் ஆகியவற்றுக்குப் பொருந்தும். ZXi ஏடீ, ZXi ஏடீ டூயல்-டோன், ZXi+ ஏடீ மற்றும் ZXi+ ஏடீ டூயல்-டோன் ஆகியவற்றின் விலைகளில் கார் தயாரிப்பாளர் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதே நேரத்தில், இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் LXi, LXi சிஎன்ஜி, VXi மற்றும் VXi சிஎன்ஜி வேரியன்ட்டின் விலைகள் ரூ. 5,000 வரை அதிகரித்துள்ளது. இதன் VXi ஆட்டோமேடிக் வேரியண்ட்டில் மட்டுமே ரூ. 5,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை ரூ. 8.34 லட்சத்தில் இருந்து ரூ. 14.14 லட்சம் (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்) வரை விற்கப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்