XUV 3XO ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி செக்மெண்ட்டில் மஹிந்திரா ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாடல் அதன் முன்னோடியான XUV300 ஐ விட சிறந்ததாக இருப்பது மட்டுமின்றி அதன் செக்மெண்ட்டில் உள்ள அனைத்து மாடல்களையும் விட குறைந்தது 50,000 ரூபாய் மலிவானது. இப்போது மஹிந்திராவின் இந்தப் புதிய மாடலுக்குப் போட்டியாக, டாடா மோட்டார்ஸ் ஸ்மார்ட்(O) என்ற பெயரில் நெக்ஸானின் புதிய பேஸ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையில் இந்த இரண்டு எஸ்யுவிகளின் என்ட்ரி லெவல் வேரியன்ட்டை ஒப்பிட்டு எந்த மாடல் சிறந்தது என்பதைப் இதில் பார்ப்போம்.
விலைகள்
மஹிந்திரா XUV 3XO ஆனது MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 லக்சுரி, AX7 மற்றும் AX7 லக்சுரி உள்ளிட்ட ஒன்பது வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இருப்பினும், இந்த கட்டுரையில் அதன் என்ட்ரி லெவல் MX1 வேரியன்ட்டைப் பார்ப்போம், இது ரூ. 7.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றன.
டாடா நெக்ஸான் ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. புதிய வேரியன்ட்டைப் பொறுத்த வரையில், நெக்ஸான் ஆனது ஸ்மார்ட் (O), ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ S ஆகிய மூன்று புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. முந்தையது பெட்ரோல் வெர்ஷன், பிந்தைய இரண்டு டீசல் இன்ஜின்களுடன் கிடைக்கும். விலையைப் பற்றி பேசுகையில், நெக்ஸானின் புதிய பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் வேரியன்ட் ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
இப்போது அவற்றை ஒப்பிடுகையில், XUV 3XO இன் MX1 மாறுபாடு Nexon Smart (O) ஐ விட ரூ. 50,000 மலிவானது.
அம்சங்கள்
மஹிந்திரா XUV 3XO MX1 | ஹாலோஜென் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் |
எல்இடி டிஆர்எல்ஸ் | |
ஓஆர்விஎம்ஸில் எல்இடி இன்டிகேட்டர் | |
எல்இடி டெயில்லேம்ப்ஸ் ஆறு ஏர்பேக்குகள் | |
எலக்ட்ரோனிக்ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) | |
ஐசோஃபிக்ஸ் மவுண்ட்ஸ் | |
16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ் | |
மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்ஸ் | |
இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் | |
ஸ்டீயரிங் மோட்ஸ் | |
நான்கு பவர் விண்டோ | |
ஒன் டச் அப்/டவுன் - டிரைவர் விண்டோ | |
ஸ்டோரேஜுடன் ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட் | |
60:40 ஸ்ப்ளிட் ரியர் சீட் | |
ரியர் ஏசி வென்ட்ஸ் | |
யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ் (டைப்-A மற்றும்-C) | |
12V சாக்கெட் | |
பின் வரிசைக்கு சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் | |
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ் | |
அனைத்து பயணிகளுக்கும் சீட்பெல்ட் ரிமைன்டர் | |
முன் உயரத்தை சரிசெய்யக்கூடிய சீட் பெல்ட்கள் | |
அனைத்து பயணிகளுக்கும் த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட்கள் |
டாடா நெக்ஸான் ஸ்மார்ட் (O) | ஆறு ஏர்பேக்ஸ் |
எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் (ESP) | |
எல்இடி ஹெட்லேம்ப்கள் | |
எல்இடி டிஆர்எல்ஸ் | |
எல்இடி டெயில்லேம்ப்ஸ் | |
இல்லுமினேட்டட் லோகோவுடன் ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் | |
ஃப்ரண்ட் பவர் விண்டோஸ் | |
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் | |
ஐசோஃபிக்ஸ் மவுண்ட்ஸ் | |
டிரைவ் மோட்ஸ் |
இன்ஜின்
மஹிந்திரா XUV 3XO மற்றும் டாடா நெக்ஸான் இரண்டும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறுகின்றன. நெக்ஸான் த்ரீ சிலிண்டர் ரெவோட்ரான் யூனிட்டுடன் 118bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், XUV 3XO ஆனது 109bhp ஆற்றல் மற்றும் 200Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் எம்ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. நெக்ஸானுடன் ஒப்பிடும்போது, XUV 3XO சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸைப் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்