- கியா EV9 இந்த் ஆண்டின் வேர்ல்டு எலக்ட்ரிக் கார் என்ற விருதையும் பெற்றது
- EV9 இல் மூன்று பேட்டரி விருப்பங்கள் உள்ளன
இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற 2024 உலக கார் விருதுகளில் மின்சார கார்கள் ஆதிக்கம் செலுத்தியது, இதில் தென் கொரிய கார் நிறுவனமான கியாவின் எலக்ட்ரிக் காரான EV9 எஸ்யுவிஇந்த ஆண்டு “வேர்ல்டு கார் ஆஃப் தி இயர்” விருந்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் 'வேர்ல்டு எலக்ட்ரிக் வெஹிக்கிள் ஆஃப் தி இயர்' விருதையும் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு 2024 உலக கார் விருதுகளில் எலக்ட்ரிக் கார்கள் ஆதிக்கம் செலுத்தியது. கியாவைத் தவிர, ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, டொயோட்டா மற்றும் வால்வோ ஆகிய நிறுவனங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளன. இவி கார்கள் கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை வென்றுள்ளன. உலகெங்கிலும் உள்ள 29 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஜூரி உறுப்பினர்கள் ஆட்டோ ஷோவில் பங்கேற்று, 38 கார்களை சோதனை செய்து மதிப்பீடு செய்தனர்.
கியா EV9 இல் மூன்று பேட்டரி ஆப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 76.1kWh பேட்டரி பேக், ரியர்-வீல் டிரைவ் எலக்ட்ரிக் மோட்டார், 99.8kWh பேட்டரி பேக்கில் ஆல்-வீல் டிரைவ் கொண்ட இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் உண்டு. இதன் அதிகபட்ச ஸ்பீட் மணிக்கு 185 கிமீ மற்றும் EV9 ஆனது 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 9.4 வினாடிகளில் எட்டிவிடும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 541 கிமீ வரை உள்ளது. இது 800V அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்வதன் மூலம் 239 கிமீ வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்