- நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கும்
- அக்டோபரில் வெயிட்டிங் பீரியட் குறைந்துள்ளது
ஹூண்டாய் வெர்னா மார்ச் 2023 இல் லான்ச்க்கு பிறகு முதல் முறையாக தள்ளுபடி விற்பனையில் உள்ளது. இந்த மிட்-சைஸ் செடான் இரண்டு இன்ஜின் விருப்பங்களில்,EX, S, SX, மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது.
வேரியண்ட்டை பொறுத்து ரூ. 25,000 வரை தள்ளுபடியை கேஷ் தள்ளுபடி, கார்ப்பரேட் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற வடிவில் பெறலாம். சலுகைகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அருகிலுள்ள ஹூண்டாய் டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
வெர்னா செடான் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. முந்தையது 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டர்போ-பெட்ரோல் மோட்டார், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் விருப்பத்துடன் 158bhp மற்றும் 253Nm பீக் டோர்க்கை உருவாக்கும் திறன் கொண்டது.
சமீபத்தில், ஹூண்டாய் வெர்னாவிற்கான லேட்டஸ்ட் வெயிட்டிங் பீரியட் 16 வாரங்களாக குறைக்கப்பட்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்