தற்போது, பெரும்பாலான புதிய கார்கள் ஏடாஸ் (அட்வான்ஸ் டிரைவர் அஸ்சிஸ்டென்ஸ் சிஸ்டம்) உடன் வெளியிடப்படுகின்றன, அவற்றில் பல அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ஏசிசி) ஆகியவையும் அடங்கும். இருப்பினும், க்ரூஸ் கன்ட்ரோல் புதிய அம்சம் அல்ல என்றாலும், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் இந்திய சந்தைக்கு புதியது. இந்தக் கட்டுரையில் இந்த தொழில்நுட்பத்தைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு தரப்போகிறோம்.
க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?
க்ரூஸ் கன்ட்ரோல் என்பது உங்கள் காரை ஒரு நிலையான வேகத்தில் செட் செய்ய உதவும் அம்சமாகும். குறிப்பிட்ட வேகத்தில் காரை ஓட்டுவதற்கு த்ரோட்டில் அல்லது ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த ஃபங்ஷனில், உங்கள் கார் நிலையான வேகத்தில் இயங்குகிறது, திடீரென்று உங்களுக்கு பிரேக்குகள் தேவைப்பட்டால், நீங்கள் பிரேக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என்றால் என்ன?
மேலே க்ரூஸ் கன்ட்ரோல் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொன்னது போல், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மிகவும் நவீனமானது. ஏடாஸ் பொருத்தப்பட்ட பெரும்பாலான கார்கள் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் வருகின்றன. இதில், வேகத்தை செய்த உடன், சுற்றியுள்ள போக்குவரத்து வேகத்திற்கு ஏற்ப நகரும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கார் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும். அதாவது உங்களுக்கு முன்னால் செல்லும் கார் மணிக்கு 40 கிமீ வேகத்தில் சென்றால், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் அந்த காரிலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்து அதற்கேற்ப உங்கள் காரின் வேகத்தை பராமரிக்கும். சிறந்த அம்சம் என்னவென்றால், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் மூலம் டிரைவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, மேலும் கார் தானாகவே மெதுவாக/நிறுத்தப்படும்.
குறிப்பு:- இந்த டெக்னாலஜியை முழுமையாக நம்ப முடியாது என்பதால், அதைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பானதாக உணரும்போது மட்டுமே அதைப் பயன்படுத்துங்கள் மற்றும் மோசமான வானிலை, பனி, மழை போன்றவற்றில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்