- நான்கு வேரியன்ட்ஸ் மற்றும் ஒன்பது வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
- இது இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. இதன் விலை 14.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த த்ரீ ரோ எஸ்யுவி நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு சென்றடைய தொடங்கியது.
பிளாட்டினம், சிக்னேச்சர், பிரெஸ்டீஜ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட நான்கு வேரியன்ட்ஸில் புதிய அல்கஸாரை வாங்கலாம். இது ஒன்பது வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, இதில் ரோபஸ்ட் எமரால்டு, ஸ்டாரி நைட், ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட், அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே மேட், ரோபஸ்ட் எமரால்டு மேட் மற்றும் அட்லஸ் ஒயிட் மற்றும் பிளாக் ரூஃப் டூயல்-டோன் ஆகியவை அடங்கும்.
அதன் டாப் மாடலில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், டூயல்-ஜோன் ஏசி, 360 டிகிரி கேமரா, லெவல் 2 ஏடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட் உடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பெறுகிறது. கூடுதலாக, ஃப்ரண்ட்மற்றும் செகண்ட் ரோ சீட்ஸ்க்கு வென்டிலேடெட் மற்றும் பவர்ட் சீட்ஸ் உள்ளன.
புதிய அல்கஸாரின் இன்ஜின் பற்றி பேசுகையில், இது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் சமீபத்தில் தனது ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட மைலேஜை வெளிப்படுத்தியது, இதில் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் லிட்டருக்கு 18 கிமீ மற்றும் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் லிட்டருக்கு 20.4 கிமீ வரை உள்ளது, இது அதை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்