- இரண்டு இன்ஜின் விருபங்களில் வழங்கப்படுகின்றன
- இந்த விலை அக்டோபர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்
சிட்ரோன் இந்தியா பஸால்ட்டை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. இந்த கூபே எஸ்யுவிக்கான முன்பதிவுகள் ரூ. 11,001 என நிர்ணயிக்கப்பட்ட தொகையுடன் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த விலை அக்டோபர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
நிறம் மற்றும் டிசைன் சிறப்பம்சங்கள்
பஸால்ட் ஆறு வண்ண விருப்பங்களில் வழங்கப்படும் மற்றும் இரண்டு வகையான அலோய் வீல் டிசைன் உடன் கிடைக்கும். மற்ற சிறப்பம்சங்களில் சாதாரண டோர் ஹேண்டல்ஸ், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், வீல் ஆர்ச் கிளாடிங் மற்றும் ஃபுல் எல்இடி லைட் பேக்கேஜ் ஆகியவை அடங்கும்.
இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
C3 ஏர்கிராஸைப் போலவே இன்டீரியர் பெயிண்ட் ஸ்கீம் பெய்ஜ் மற்றும் பிளாக் கலரில் உள்ளது. இதில் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், செகண்ட் ரோவுக்கு அட்ஜஸ்ட்டெபல் தை சப்போர்ட், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், இரண்டு ரோக்கும் ஆர்ம் ரெஸ்ட்ஸ் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.
இன்ஜின் விருப்பங்கள்
C3 ஏர்கிராஸ் போலல்லாமல், பஸால்ட் 1.2-பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களுடன் வழங்கப்படும். இதன் என்ஏ இன்ஜின் 80bhp பவர் மற்றும் 115Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதன் டர்போ பெட்ரோல் இன்ஜின் 109bhp பவரையும், 190Nm (மேனுவல்) மற்றும் 205Nm (ஆட்டோமேட்டிக்) டோர்க் திறனையும் உருவாக்குகிறது.