- கர்வ் தயாரிப்பு பதிப்பில் ஃப்ரெஸ்ட் பெயர்ரைப் பெறலாம்
- கர்வ் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்
டாடா மோட்டார்ஸ் புதிய டிரேட்மார்க் முத்திரையை பதிவு செய்துள்ளது
டாடா மோட்டார்ஸ் நாட்டில் 'ஃப்ராஸ்ட்' பெயர்க்கு புதிய டிரேட்மார்க் முத்திரையை பதிவு செய்துள்ளது. அதன் விண்ணப்பம் 2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது மற்றும் அது இந்த வார தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது. கர்வ் கூபே எஸ்யுவியின் தயாரிப்பு பதிப்பிற்கு புதிய பெயரை வழங்கலாம்.
டாடா கர்வ் இவி மற்றும் ஐசிஇ வெர்ஷன்ஸில் வழங்கப்படும்
கர்வ் கான்செப்ட் முதன்முதலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எஸ்யுவி கூபே அதன் ஐசிஇ அவதாரத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிடப்பட்டது, அங்கு இது எலக்ட்ரிக் வெர்ஷனின் உற்பத்தி-தயாரான பதிப்பில் காணப்பட்டது.
டாடா கர்வ் ஐசிஇ ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது
டாடா கர்வ் ஐசிஇ வெர்ஷன் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடலில் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ், இரண்டாவது வரிசை பெஞ்ச் சீட்ஸ், புதிய வீல்ஸ், புதிய ஃப்ரண்ட் பம்பர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏர்டாம் ஆகியவை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய 1.2-லிட்டர் அல்லது 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்