- இதன் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ தூரம் செல்லும்
- ஒற்றை வேரியன்ட்டில் மட்டுமே வழங்கப்படும்
பிரிட்டிஷ் சொகுசு வாகன உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் காரை ரூ. 7.50 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழு மின்சாரத்திற்கும் செல்லும் அதன் திட்டங்களை வலுப்படுத்தி, மின்சாரப் பிரிவில் பிராண்டின் முன்னேற்றத்தை குறிக்கிறது.
டிசைன் பற்றி பேசுகையில் முன்பக்கத்தில், ஸ்பெக்டர் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், சாய்வான ரூஃபுடன் கூடிய ஐகானிக் இல்லுமினேட்டட் பாந்தியோன் ஃப்ரண்ட் கிரிலில் செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் 21-இன்ச் ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.
இன்டீரியரில், வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-டோன் ப்ரீமியம் இன்டீரியர், டோர் மற்றும் டாஷ்போர்டில் இல்லுமினேட்டட் பேனல்கள் மற்றும் சீட்ஸுக்கு பலவிதமான அப்ஹோல்ஸ்டரி கஸ்டமைசேஷன் மற்றும் மற்ற இன்டீரியர் பேனல்களுக்கான விருப்பங்களுடன் இது வழங்கபடும்.
ரோல்ஸ் ராய்ஸ் 3.0 ப்ளாட்ஃபார்மில் கட்டப்பட்ட, ஸ்பெக்டர் அதன் ஆற்றலை 102kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் பெறுகிறது, இது 195kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 34 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய உதவுகிறது. இந்த பேக் ஃப்ரண்ட் மற்றும் ரியர் அக்சலால் 575bhp மற்றும் 900Nm டோர்க் வெளியீட்டை உருவாக்க உதவுகிறது. இந்த சொகுசு எலக்ட்ரிக் கார் 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் மற்றும் ஒரு முழு சார்ஜில் 530 கிமீ வரை செல்லும் டபிள்யூஎல்டபி- உரிமை கோரப்பட்ட ரேஞ்சை பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்