- புதிய 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது
- மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது
மாருதி சுஸுகி 2024 ஸ்விஃப்ட்டை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியது, மேலும் எங்கள் வெப்சைட்டில் வேரியன்ட்ஸ் வாரியான விலைகளுடன் அனைத்து விவரங்களையும் நீங்கள் படிக்கலாம். அதே நேரத்தில், நியூ ஜெனரேஷன் ஹேட்ச்பேக்கின் மைலேஜையும் இந்த பிராண்ட் வெளிப்படுத்தியுள்ளது.
ஃபோர்த் ஜெனரேஷன் மாருதி ஸ்விஃப்ட்டில் புதிய 1.2 லிட்டர், த்ரீ சிலின்டர், Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 80bhp மற்றும் 112Nm டோர்க்கை உருவாக்க டியூன் செய்யப்பட்டுள்ளது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது ஏஎம்டீ யூனிட் இயக்கப்படுகிறது.
2024 ஸ்விஃப்ட் வெர்ஷன் வாரியான மைலேஜ் பின்வருபவை.
வெர்ஷன் | மைலேஜ் |
ஸ்விஃப்ட் எம்டீ | 24.8 கிமீ |
ஸ்விஃப்ட் ஏஎம்டீ | 25.75 கிமீ |
அப்டேட்களை பொறுத்தவரை, 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் புதிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்ஸ், க்ளோஸி பிளாக் கிரில், புதிய 15-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ் மற்றும் புதிய பம்பர்களுடன் திருத்தப்பட்ட எக்ஸ்டீரியர் டிசைனைப் பெறுகிறது. இன்டீரியரில், இது ஒன்பது இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் ஏசி வென்ட்ஸ், கீலெஸ் என்ட்ரி மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றுடன் வருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்