- டிசையர் நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- இது BS6 2.0 அப்டேடட் இன்ஜினை பெறுகிறது
மாருதி சுஸுகி டிசையர் இந்தியாவில் காம்பேக்ட் செடானை வாங்குபவர்களிடையே பிரபலமான தேர்வாகும். இது LXi, VXi, ZXi மற்றும் ZXi ப்ளஸ் ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. மாருதி டிசையரின் தேவையை பூர்த்தி செய்ய, இது தற்போது முன்பதிவு செய்த நாளிலிருந்து 18 வாரங்கள் அல்லது நான்கு மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடை குறிக்கிறது.
மாருதி டிசையரின் வேரியண்ட்-வாரியான வெயிட்டிங் பீரியட்
நான்கு வேரியண்ட்ஸில், பேஸ்-ஸ்பெக் LXi மற்றும் VXi சிஎன்ஜி ஆகியவை 16 முதல் 18 வாரங்கள் வரை அதிக காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது. மற்ற பெட்ரோல் வேரியண்ட்ஸ்க்கு நான்கு வாரங்கள் காத்திருக்கும் காலம் ஆகும். இதற்கிடையில், ZXi யின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வடிவத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் காரை டெலிவரி செய்ய ஏழு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
15 ஜூன், 2023 நிலவரப்படி, கொல்கத்தா நகரில் டிசையர் காரின் வேரியண்ட் வாரியான வெயிட்டிங் பீரியட் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
வேரியண்ட்ஸ் | வெயிட்டிங் பீரியட் |
LXi | 12 முதல் 16 வாரங்கள் |
VXi, ZXi, மற்றும் ZXi ப்ளஸ் | 4 வாரங்கள் |
ZXi சிஎன்ஜி | 5 முதல் 7 வாரங்கள் |
VXi சிஎன்ஜி | 16 முதல் 18 வாரங்கள் |
மேற்கூறிய வெயிட்டிங் பீரியட் இடம், டீலர்ஷிப், நிறங்கள், வேரியண்ட்ஸ் மற்றும் ஸ்டாக் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் தகவலைப் பெற, அருகிலுள்ள மாருதி-அங்கீகரிக்கப்பட்ட அரீனா டீலர்ஷிப்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
மாருதி சுஸுகி டிசையர் BS6 2.0 இன்ஜின்
மாருதி சுஸுகி டிசையர் BS6 2.0 அப்டேடட் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் சிஎன்ஜி விருப்பத்துடன் இயக்கப்படுகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது இந்த இன்ஜின் 89bhp மற்றும் 113nm டோர்க்கை உருவாக்குகிறது. மறுபுறம், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய சிஎன்ஜி வெர்ஷனில், இந்த இன்ஜின் 76bhp மற்றும் 98.5Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்