- சமீபத்தில் க்ரெட்டாவின் விலையும் அதிகரித்துள்ளது
- ஹூண்டாய் i20 வேரியன்ட்ஸில் மாற்றங்கள்
ஹூண்டாய் இந்தியா தனது மாடல் ரேஞ்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம், இந்த மாதம் அந்தந்த கார்களின் விலையை உயர்த்திய ஹோண்டா, கியா, டொயோட்டா மற்றும் எம்ஜி பிராண்டுகளின் வரிசையில் ஹூண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது.
வென்யூவின் S(O) 1.0 டர்போ எம்டீ மற்றும் S(O) 1.0 டர்போ டிசிடீ வேரியன்ட்ஸில் ரூ. 35,000 வரை விலை அதிகரித்துள்ளது. ஹூண்டாய் சப்-4-மீட்டர் எஸ்யுவியின் மற்ற வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, இந்த மாடலின் விலை ரூ. 7.94 லட்சத்தில் தொடங்கி ரூ. 10.71 லட்சம் வரை உள்ளது (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).
மற்ற செய்தியில், ஹூண்டாய் க்ரெட்டாவும் இந்த மாதத்தில் விலை உயர்வைக் கண்டுள்ளது. இந்த பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவியின் விலையில் ரூ. 10,800 வரை அதிகரித்துள்ளது. இது மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுடன் போட்டியிடும். கொரிய பிராண்ட் i20 லைன்-அப்பில் மாற்றங்களைச் செய்துள்ளது, மேலும் முழு விவரங்கள் எங்கள் வெப்சைட்டில் உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்