- மே 2024 இரண்டாவது வாரத்தில் வழங்கப்படும்
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 இல் இது காட்சிப்படுத்தப்பட்டது
மாருதி சுஸுகி நிறுவனம் தனது நான்காவது ஜெனரேஷனான ஸ்விஃப்ட்டின் லான்ச் தேதியை வெளியிட்டது, இது அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், டெஸ்ட்டிங் போது இது பல முறை காணப்பட்டது, இது தற்போதைய மாடலிருந்து வேறுபட்டதாக இருக்கும். 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் டிசைனில் பல மாற்றங்களைக் காணும், இன்டீரியரில் அதிக மாற்றங்கள் மற்றும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸுகி ஸ்விஃப்ட் சர்வதேச அளவில் அறிமுகமானது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
புதிய ஸ்விஃப்ட்டின் அம்சங்கள் மற்றும் மதிப்பிடப்பட்ட விலை
புதிய ஸ்விஃப்ட், 'HEARTECT' எனப்படும் சுஸுகி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது, இது வாகனங்களை இலகுவாகவும், வலிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுகிறது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரண்ட் கிரில், ஷார்ப் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், ரியரில் ஒரு ஸ்போர்ட்டி ஸ்பாய்லர், புதுப்பிக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 15-இன்ச் அலோய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முன்பு போலவே டோரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேன்டல்ஸைத் தக்க வைத்துக் கொள்ளும், மேலும் புதிய சி-வடிவ எல்இடி டெயில் லைட் மற்றும் பல புதிய வண்ண விருப்பங்களிலும் வழங்கப்படும். இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றுடன் போட்டியிடும், இதன் ஆரம்ப விலை ரூ. 7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் இன்டீரியர்
வரவிருக்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய பெரிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டாஷ்போர்டு, புதிய எச்விஏசி வென்ட்ஸ், புதிய கேபின் தீம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஃப்ளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல அடங்கும். இது தவிர, இது ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி, ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் மவுண்ட் மற்றும் ரியர் ஏசி வென்ட்களையும் பெறும். இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலில் ஏடாஸ் அம்சங்கள் கிடைக்காது.
2024 ஸ்விஃப்ட்டின் இன்ஜின் எப்படி இருக்கும்?
2024 ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் இசட்-சீரிஸ், த்ரீ சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 82bhp பவரையும், 112Nm டோர்க் திறனையும் உருவாக்கும். இந்தியா-ஸ்பெக் மாடலில் 1.2 லிட்டர், ஃபோர் சிலின்டர் பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 89bhp பவர் மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. சர்வதேச மாடல் சிவிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும், மேலும் இந்திய மாடலில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்