- இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட்டின் விலை ரூ. 6.49 லட்சம்
- ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்
மாருதி சுஸுகி இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் ஃபோர்த் ஜென் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸுக்கு போட்டியாக மேம்படுத்தப்பட்ட இந்த ஹேட்ச்பேக்கின் டெலிவரி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ ஜெனரேஷன் மாருதி ஸ்விஃப்ட்டின் புக்கிங் மே 1 அன்று ரூ. 11,000, மற்றும் இப்போது புதுப்பிக்கப்பட்ட காருக்கு சுமார் 10,000 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்பதிவு தொடங்கிய 10 நாட்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
2024 ஸ்விஃப்ட் ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது - LXi, VXi, VXi(O), ZXi மற்றும் ZXi+. ஆறு மோனோ-டோன் மற்றும் மூன்று டூயல்-டோன் விருப்பங்கள் உட்பட ஒன்பது வண்ணங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இது ஒரு புதிய 1.2-லிட்டர், Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்